ஹவுதிக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்திய பிரித்தானியா!

You are currently viewing ஹவுதிக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்திய பிரித்தானியா!

பிரித்தானியாவும், அமெரிக்காவும் இணைந்து ஹவுதி இலக்குகளுக்கு எதிராக இரண்டாவது முறையாக கூட்டுத் தாக்குதல்களை நடத்துகின்றன. ஹவுதி தாக்குதல்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளன. இதனால் உலகளாவிய பணவீக்கம் பற்றிய அச்சம் தூண்டப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி பிரித்தானியா அமெரிக்காவுடன் இணைந்து முதல் கூட்டுத் தாக்குதலை ஹவுதிக்கு எதிராக நடத்தியது.

இந்த நிலையில், செங்கடல் கப்பல் போக்குவரத்தை இலக்காகக் கொண்ட ஈரானுடன் இணைந்த குழுவிற்கு எதிரான சமீபத்திய நடவடிக்கையாக, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இரண்டாவது கூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இது அமெரிக்காவால் தொடங்கப்பட்ட 8வது தாக்குதல், ஆனால் இரண்டாவது கூட்டு முயற்சி என கூறப்படுகிறது. ஹவுதி இலக்குகளுக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரால் இத்தாக்குதல் உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து முந்தைய நாள் இருவரும் தொலைபேசியில் பேசியதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments