சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியாக ஹாங்காங் உள்ளது. இதனிடையே, ஹாங்காங்கில் தென்சீன கடல் பகுதியில் நேற்று கப்பல் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. அந்த கப்பலில் 30 பேர் பயணித்தனர். ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்திற்கு உள்பட கடல் பகுதியில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென பயங்கரமான புயல் தாக்கியது.
இந்த புயல் தாக்கியதில் கப்பல் இரண்டாக உடைந்தது. இதனால், கப்பலில் பயணித்த 30 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், கப்பலில் பயணித்த எஞ்சிய 27 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால், காணாமல் போன 27 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.