ஹாங்காங் (Hongkong) நகரில் அவசரகால நிலை பிரகடனம்! “கொரோனா” வைரஸின் எதிரொலி!!

You are currently viewing ஹாங்காங் (Hongkong) நகரில்  அவசரகால நிலை பிரகடனம்! “கொரோனா” வைரஸின் எதிரொலி!!

ஹாங்காங் நகரில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக பரவிவரும் “கொரோனா” வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துமுகமாக இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாடசாலைகள் உள்ளிட்ட, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், “கொரோனா” வைரஸின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவின் “Wuhan” நகரிலிருந்து எவரும் ஹாங்காங்கிற்குள் வர முடியாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹாங்காங்கிற்குள் நுழையும் அனைவரும், நகரத்தின் எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள், வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் அத்தாட்சியை சமர்ப்பித்தால் மட்டுமே, நகருக்குள் நுழைய முடியுமெனவும், இது விடயத்தில் அலட்சியமாக இருப்பவர்களுக்கு 5000 ஹாங்காங் டொலர்கள் தண்டமாக அறவிடப்படுமெனவும், ஹாங்காங் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்குள் வரும் அதிவிரைவு தொடரூந்துகள் தொடர்பிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இதேவேளை, “கொரோனா” வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் “Wuhan” நகருக்கு அருகாமையாக, 1000 படுக்கைகளைக்கொண்ட புதிய விசேட வைத்தியசாலையொன்றை அமைக்கும் வேலைகள் மின்னல் வேகத்தில் நடைபெறுவதாகவும், வெறும் பத்தே நாட்களில் பணிகள் நிறைவடைந்துவிடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனா, ஜப்பான், ஹாங்காங், தாய்வான், மலேசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளில் இதுவரை “கொரோனா” வைரஸ் அவதானிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள