ஹாரி-மேகன் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பா?- பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு!

  • Post author:
You are currently viewing ஹாரி-மேகன் தம்பதிக்கு அரசு செலவில் பாதுகாப்பா?- பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு!

கடந்த மாதம் அரசு குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகுவதாக, ஹாரி-மேகன் தம்பதி அறிவித்தனர். இதற்கு ராணி 2-ம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கனடா நாட்டின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர்.

வான்கூவர் தீவின் விக்டோரியா பகுதியில் வசித்து வரும் அவர்களுக்கு, பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் கனடா அரசு உள்ளது. எனினும், அதற்கு ஆகும் செலவை, கனடா அரசு ஏற்குமா, இல்லையா என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஹாரி-மேகன் தம்பதியின் பாதுகாப்பு செலவுகளை, கனடா அரசு ஏற்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, மக்கள் மத்தியில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில், ஹாரி-மேகன் தம்பதிக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளால் ஏற்படும் செலவுகளை, கனடா அரசு ஏற்கக்கூடாது என, 77 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். வெறும் 19 சதவீத மக்களே பாதுகாப்பு செலவுகளை அரசு ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள