மாவீர்ர்களான லெப்கேணல் காவியா மேஜர் மோகன் ஆகியோரின் தாயார் சுடரேற்றி தியாகதீபத்திற்கு மலர்மாலை அணிவிக்க உடுத்துறை மாவீர ர் துயிலும் இல்லத்தில் தியாகப்பயணத்தின் பத்தாவது நாள் ஊர்திப்பயணம் தொடங்கியது.
வடமராட்சிக்கிழக்கில் மருதங்கேணி வத்திராயன் செம்பியன்பற்று நாகர்கோவில் மற்றும் குடத்தனை கிராமங்கள் வழி தொடரும் தியாகதீபம் திலீபன் ஊர்திப்போராட்டம் இப்போது வடமராட்சியில் பருத்தித்துறை சுப்பர்மடம் மற்றும் தமிழீழத்தேசியத்தலைவர் இல்லம் ஊடாக எழுச்சியோடு பயணித்துக்கொண்டிருக்கின்றது வழிமுழுவதும் மக்கள் திலீபனுக்கு மலர்வணக்கம் செலுத்தி வருகின்றனர்.







