உகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 3-ம் தேதி முதல் உகான் நகரில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இந்த சுழலில் 11 வார கால ஊரடங்கு கடந்த ஏப்ரல் 8ம் திகதி தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் உகானில் ஒரே குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கு அறிகுறி இன்றி நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உகான் நகர் முழுவதிலும் உள்ள 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உகான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் இதனை 10 நாட்களில் செய்து முடிக்க காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.