13ம் சட்டத்தினை முழுமையாக நிறைவேற்ற முடியாது:கோத்தா கடுமை?

You are currently viewing 13ம் சட்டத்தினை முழுமையாக நிறைவேற்ற முடியாது:கோத்தா கடுமை?

13வது திருத்தத்தை அப்படியே நடைமுறைப்படுத்த முடியாது. அதிலுள்ள சிர சரத்துக்கள் நடைமுறைப்படுத்த முடியாதவை. அதற்கான மாற்று வழிகளை அரசியல்ரீதியாக கண்டறிய வேண்டும் என கூறி, தமிழர்களின் கடைசி நம்பிக்கைக்கும் சாவு மணி அடித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுக்கும் இடையில் இன்று (07) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,

இதன்போது ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெரிவித்தார்.இந்த சந்தர்பத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையை முதலீட்டு மையமாக கருதி அதற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் இலங்கையின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை போன்ற சிறிய நாட்டினது பொருளாதார வேகத்தை ஏனைய நாடுகளுக்கு ஒப்பான முறையில் முன்னெடுத்து அதனூடாக பிராந்திய நாடுகள் அதிகாரத்தை எதிர்பார்பது சிறப்பானதாக அமையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள