குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேபோன்று
நாட்டில் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தினால் பிரிவினைவாத அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் நோக்கம் நிறைவேறுமே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் 13 ஐ அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அமைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
18 ஆம் திகதி பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆக மொத்தத்தில் இறந்துபோன 13ம் திருத்த சட்டத்திற்கே தலையில் அடித்து கதறும் இந்த தமிழின அழிப்பாளிகள் எப்படி தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்குவார்கள் என்பதை கபட நாடகம் ஆடும் தமிழ் அரசியல் கட்சிகளும் உலகமும் புரிந்துகொள்ளவேண்டும். இதுதான் சிங்களத்தின் 70 ஆண்டுகளுக்கு மேலான நிலைப்பாடு என்பதை ஏமாற்ற துடிப்பவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.