யாழ்ப்பாணம் பலாலி சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த இலவச வகுப்பு நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாலி சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , புதன்கிழமை தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர்.
குறிப்பிட்ட கருத்தரங்கின் போது , 13 வயதான மாணவிகள் இருவர் இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்ததை அடுத்து குறித்த சந்தேக நபரை சிறீலங்கா காவற்துறையினர் கைது செய்யதுள்ளனர்.
இதேவேளை
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையான 78 வயதுடைய முதியவர் விசாரணைகள் மூலம் குற்றவாளியாக இனங்காணப்பட்டு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது நேற்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 10 வயதுடைய மகளை அடித்து துன்புறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சிறுமியின் வாக்கு மூலம், சாட்சியங்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் நீதிமன்றம் குறித்த முதியவரை குற்றவாளியாக இனங்கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இவ்வாறு தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 78 வயதுடைய தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் ,பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.