15 மில்லியன் மக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர் ; கொரோனா வைரஸ்!

  • Post author:
You are currently viewing 15 மில்லியன் மக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர் ; கொரோனா வைரஸ்!

இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க Milano, Venezia மற்றும் வடக்கு இத்தாலியின் பிறபகுதிகளில் 15 மில்லியன் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனர்.

பிரதம மந்திரி கியூசெப் கோன்டே (Giuseppe Conte) ஞாயிறு இரவு இந்த கடுமையான நடவடிக்கை குறித்த ஆணையை அறிவித்ததுடன், இந்த தடை சில மணிநேரங்களில் நடைமுறைக்கு வந்து ஏப்ரல் 3 வரை நீடிக்கும் என்றும் அறிவித்தார்.

15 மில்லியன் மக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர் ; கொரோனா வைரஸ்! 1
FOTO: Andrew Medichini / AP/NTB Scanpix

கோரியேர் டெல்லா செரா(Corriere della Sera) செய்தித்தாள் அறிக்கையின்படி, லோம்பார்டிக்கு (Lombardia) உள்ளேயும் வெளியேயுமான அனைத்து போக்குவரத்தும், மற்றும் மில்லியன் நகரமான மிலன்(Milano) உட்பட வடக்கு இத்தாலியில் உள்ள 14 மாகாணங்களும் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு போக்குவரத்துகள் கட்டுப்படுத்தப்படும் என்றும், மேலும் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகச் சிறந்த காரணம் இருந்தால் மட்டுமே, தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய அல்லது வெளியேற மக்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்றும், பிற பிராந்தியங்களில் உள்ள மக்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

15 மில்லியன் மக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர் ; கொரோனா வைரஸ்! 2
FOTO: Andrew Medichini / AP/NTB-Scanpix

அவசர வணிகம், குடும்பநிகழ்வு அல்லது ஒத்திவைக்க முடியாத சுகாதார காரணங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என்று கோன்டே(Conte) கூறினார். இருப்பினும் மக்களை முடிந்தவரை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதாரம்/ மேலதிக தகவல்:- Aftenposten

பகிர்ந்துகொள்ள