இலங்கை உள்நாட்டு போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடிய தாயார், மகனை காணாமலே உயிரிழந்துள்ளமை பெரும் தூயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தின் 3000ஆவது நாளான இன்று (24) தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வவுனியா தோனிக்கல்லினை சேர்ந்த 79 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார். இவரின் மகன் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே காணாமல் ஆக்கப்பட்டார்.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார்.
இதேவேளை, உயிரிழந்த தாயார் , உறவுகளை தேடிய காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் தொடர்ச்சியாக இணைந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
