வடக்கில் தொடரும் செயின் பறிப்பு பெண்கள் வீதியால் செல்ல அச்சம்!

You are currently viewing வடக்கில் தொடரும் செயின் பறிப்பு பெண்கள் வீதியால் செல்ல அச்சம்!
வடக்கில் தொடரும் செயின் பறிப்பு பெண்கள் வீதியால் செல்ல அச்சம்! 1

யாழ்.ஆயர் இல்லத்திற்கு பின்புறமாகவுள்ள வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தங்க சங்கிலி திருடர்களால் அறுத்து செல்லப்பட்டுள்ளது. 

வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் தங்க ஆபரணத்தை இழுத்து அறுத்தபோது சுதாரித்துக் கொண்ட பெண் அ

தனை தடுக்க முற்பட்ட வேளை அரைவாசி தங்க சங்கிலியோடு திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர் இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலும் செயின் பறிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை 03 ஆம் வட்டாராப்பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவிகள் இருவரிடத்தில் செயின் பறிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று மாலை (22.07.2020) மாலைநேர வகுப்பு முடித்தி வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் குறித்த கிராமத்தில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த வழிப்பறி கொள்ளையன் ஒருவரால் மாணவி அணிந்திருந்த ஒருபவுண் தங்க சங்கிலியினை அறுத்து சென்றுள்ளான்.
அவசரத்தில் தங்க சங்கிலியினை அறுத்த வழிப்பறி கொள்ளையன் தனது தலைக்கவசத்தினை தவறவிட்டு சென்றுள்ளதுடன் அதே கொள்ளையன் மற்றும் ஒரு பகுதியில் இளம் யுவதி ஒருவரின் தங்க செயினை அறுக்க முற்பட்ட வேளை குறித்த யுவதி கொடுத்த சத்தத்தினை தொடர்ந்து கொள்ளையன் தப்பி சென்றுள்ளான்.
இச்சம்வம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
குறித்த கிரமத்தில் வசிக்கும் வளிப்பறி கொள்ளையன் பல சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் அடிக்கடி பொலீஸ்நிலையமும் நீதிமன்றமும் சென்றுவருவதால் இவனின் அட்டகாசம் தொடர்பில் பொலீசார் விரைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்

பகிர்ந்துகொள்ள