18 அகவை யுவதிமீது பாலியல் வன்கொடுமை!

You are currently viewing 18 அகவை யுவதிமீது பாலியல் வன்கொடுமை!

 

கால்நடையாக வீட்டுக்கு சென்று  கொண்டிருந்த 18 வயதான யுவதியை, தமது வாகனத்தில் ஏற்றிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய 2 காமுகர்களை சிறீலங்கா காவற்துறையினர் தேடி வருகின்றனர்.

பாணந்துறை பகுதியிலுள்ள கடையொன்றில் பணிபுரியும் யுவதி இரவு நேரம் கடையிலிருந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

நடந்து சென்று கொண்டிருந்த யுவதியை வீடு வரை தமது வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக கூறிய பாரவூர்தி ஒன்றில் வந்தவர்கள் . யுவதி பாரவூர்திநல்ல ஏறியுள்ளனர்.

பின்வத்தை நோக்கி லொறி சென்று கொண்டிருந்த போது, ​​தான் இறங்க விரும்புவதாக யுவதி கூறியதாகவும், வாகனத்தை நிறுத்தாமல் வாதுவ பிரதேசத்தில் உள்ள ஆட்களற்ற தோட்டத்திற்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அங்கு லொறியின் முன்பகுதியில் வைத்து யுவதியை கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். யுவதி எதிர்ப்பு தெரிவித்த போது, அவரது கழுத்தில் குத்தி வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர்

ஆபத்தான நிலையில் இருந்த யுவதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பார்த்தால் துஷ்பிரயோகம் செய்த நபர்களை அடையாளம் காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டதாகவும், அவரது தாயார் சிறையில் இருப்பதாகவும், அவரது மூன்றாவது கணவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments