தொடர்ச்சியாக 09.02.2021 அன்று 2ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது.
நேற்றைய தினம் 08.02.2021 அன்று அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இருந்து ஆரம்பமான தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இன்னோர் வடிவமாக இருக்கக்கூடிய மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்து மற்றும் பெல்சியம் நாட்டின் பொறுப்பாளர்களின் வாழிட நாட்டின் தேசியக்கொடிகள் கைமாற்றி பெல்சியம் நாட்டினை மனித நேய ஈருருளிப்பயணம் வந்தடைந்தது.
மற்றும் வழி நெடுகிலும் பனிப்பொழிவு ,குளிர் காற்றின் மத்தியிலும் மாவீரர்கள் சுமந்த இலக்கினை நெஞ்சில் சுமந்து இலக்கு நோக்கி விரைந்தது. பல்லினவாழ் மக்கள் மத்தியில் எமது போராட்டத்தின் இலக்கு மற்றும்
தற்போதய காலகட்டத்தில் தொடர்ந்தும் தமிழ்மக்கள் பல வகைகளில் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதையும், 12 ஆண்டு காலம் கழிந்தும் தமிழர் தாயகத்தில் எம் இனம் ஒரு திட்டமிட்டமுறையில் மாற்றுவடிவம் பெற்ற இனவழிப்புக்குள்ளாக்கப் படுகின்றார்கள் எனவும் எதிர் வரும் 46 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்ப்ட்ட தமிழினத்திற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழர்களுக்கு தமிழீழமே தீர்வு என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இவ்வறவழிப்போராட்டம் தொடருகின்றது.
நாளை பெல்சியத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கான நினைவுக்கல்லறையின் முன்னிருந்து ஆரம்பமாகி மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சிய நாட்டின் தலை நகராகிய (Rond-Pond Robert SCHUMANN, 1000 Bruxelles ) ஐரோப்பிய ஒன்றியம் முன்றலில் 14.30 மணி முதல் 15.30 வரை நடைபெற இருக்கின்ற கவனயீர்ப்பு போராட்டத்திலே இணைந்து ஐ. நா நோக்கி மனித நேய ஈருருளிப்பயணம் 22.02.2021 அன்று ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை நோக்கி நகர்கின்றது மேலும் 22.02.2021 முதல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தொடர் 7 நாள் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி அடையாள உண்ணா நோன்பும் நடைபெற இருக்கின்றது.
என் உறவுகளே நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம் எனவே எமது தார்மீகக்கடமையினை ஆற்ற அனைத்து உறவுகளும் வாழிட நாடுகளினை எதிர் வரும் 46 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு உங்கள் நாடுகளினை தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினையும், தமிழர்களுக்கு சுதந்திரமான தமிழீழமே தீர்வு என்பனையும் வலியுற்ற கடைமைப்பட்டிருக்கின்றோம் நாம்.
மக்கட்புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”