தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவினுடைய மற்றும் மாவீரர்களின் இலட்சியக் கனவு சுமந்து பயணித்துக்கொண்டிருக்கின்றது மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம். கடந்த 02/09/2022 நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆரம்பமாகி இன்று 04/09/2022 பெல்சியம் நாட்டினை வந்தடைந்தது.
சிறிலங்கா பேரினவாத அரசு திட்டமிட்டு நடத்திய தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் முகமாக எதிர்வரும் 51 வது மனித உரிமைகள் கூட்டத்தொடரினை முன்னிட்டு இவ்வறவழிப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மேலும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக நெதர்லாந்து நாட்டினுடைய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கிளைப்பொறுப்பாளர் திரு யெயா அண்ணை அறவழிப்போராட்ட செயற்பாட்டாளர்களோடு இணைந்து பயணித்து தன் வரலாற்றுக்கடமையினை ஆற்றினார்.
நெதர்லாந்து – பெல்சியம் நாட்டு எல்லையினை மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் கடக்கும் போது இரு வாழிட நாட்டு தேசியக்கொடிகளினை இரு பொறுப்பாளர்கள் பரிமாறிக்கொள்ள, மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராளிகளை பொது மக்களும் ஆரவாரமாக வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை 05/09/2022 பெல்சியத் தலைநகர் புருசல் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் (242 Rue De Loi
1000 Bruxelles) பி.ப 1:30 மணியளவில் ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இணைந்து கொள்ள எழுச்சிகரமான முறையிலே கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கின்றது. இப்போராட்டத்தின் முக்கியத்துவமே எம் இனத்தின் விடுதலையும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை… வேண்டுவதே.
எனவே அனைத்து தமிழ் உறவுகளும் வந்து உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாளை 05/09/2022 கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெறும் விபரங்கள் :
இடம் : 242 Rue De Loi
1000 Bruxelles,Belgium
நேரம் : பி.ப 1:30
தொடர்புகளுக்கு : +32 477 13 21 15.
“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா
“எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்”
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”