போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில், மயிலிட்டி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்னாள் மற்றும் பலாலி – மயிலிட்டி பிரதேசங்களில் இன்று(15.06.2026) இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, பொதுமக்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






