அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – இணுவிலைச் சேர்ந்த 19 வயதான லவன் அக்சயன் என்பவரே நேற்று (04.04.2026) காலை உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று, கணிதப் பிரிவில் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.
அதில் 3A சித்திகளை பெற்று, யாழ் மாவட்டத்தில் 24ஆம் இடத்தைப் பெற்று சிறந்த சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் இழப்பு குடும்பத்தினரும், நண்பர்களும், பாடசாலை சமூகத்தினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.






