உலகமே வியந்து போற்றிய மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜா என்றும் எம் வாழ்வில் மறந்து விட முடியாத ஆளுமை – 29 ஆவது நினைவு தினம் 11.06.2023
***********************************************
மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் நீண்ட பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளரான துரைராஜா அவர்கள் மக்களால் மதித்து வணங்கப்பட்ட பேராசிரியராக இந்த மண்ணிலே மிடுக்கோடு பவனி வந்தவர்…. அவரே பேராதனைப் பல்கலைக் கழகத்தின் “பொறியியல் பீடத்தில் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும், “துரைராஜா தேற்றத்தின்” (Thurai’s Theoy) சொந்தக்காரர்.
அவரது வாழ்க்கையின் அடிச்சுவட்டில்…….
• உடுப்பிட்டி,இமையாணன் என்ற சரித்திர முக்கியத் துவம் வாய்ந்த கிராமத்தில் 1934.11.10 ஆம் திகதி பிறந்தார்.
• தனது ஆரம்பக் கல்வியில் இருந்து எஸ்.எஸ்.சி வகுப்பு வரை 11 ஆண்டுகள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் முதல்தர மாணவராக்க கற்றுக் கொண்டிருநதபொழுது, அந்த்க காலப்பகுதியில் அங்கு ஏச்.எஸ்.சி. உயர்தர வகுப்புக்கள் இன்மையால் ,பின்னர் எச்.எஸ்சி; உயர்தர வகுப்பைக் கற்பதற்காக காட்லிக் கல்லூரியிலும் சேர்ந்து புகழ் பெற்ற மாணவர் என்ற பெயர் எடுத்து 1953 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்திற்குத் தெரிவு செய்யப் பட்டார்.
• சிறந்த பெறுபேற்றைப் பெற்ற துரைராஜா அவர்கள், 1957 இல் இலங்கை;ப பல்கலைக் கழகத்தில் குடியியல் பொறியியல் பேராசிரியராக நியமிக்கப் பட்டார்.
• 1958 இல் பகிரங்க வேலைவாய்ப்பில்இகனிஷ்ட உதவிப் பொறியியலாளராகத் தெரிவு செய்யப் பட்டார்
• 1958 ஒக்ரோபரில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத தில் கலாநிதி (PhD) பட்டத்திற்கான ஆய்வைச் சமர்ப்பித்து பொறியியல் கலாநிதியாக உயர்ந்தார்
• 1962 இல் இலண்டனில் உதவிப் பொறிமுறைப் பொறியியலாளராகச் சேவையாற்றினார்.
• 1962 இல் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் குடியியற் பொறியியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.
• 1969 இல் கனடா வாட்டலூ பல்கலைக் கழகத்தில் விடுப்பு பேராசிரியராகப் பதவியை வகித்தார்.
• 1971 இல் மீண்டும் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பேராதனை வளாகத்தில் குடியியற் பொறி யியல் பேராசிரியராக நியமனம் பெற்றார்.
• 1975 இல் இலங்கைப்; பேராதனை வளாகத்தில் குடியியற் பொறியியல் பீடாதிபதியாக நியமனம் பெற்றார்.
• 1977 இல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழக்ததில் விடுப்பிலான பேராசிரியராகப் பதவிஏற்றார்.
• 1982 இல் பேராதனைப் பல்கலைக் கழகம் உருவாக்க்பபட்டதும்இ அதில் பொறியியல் பீடாதிபதியாக நியமனம் பெற்றார்.
• 1985 ஆம் ஆண்டு முதல் இலங்கைத் திறந்த பல்கலைக் கழத்தின் குடியியற் பொறியியல் பேராசிரியராக நியமனம் பெற்றார்.
• 1987 இல் இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் குடியியற் பொறியியல் பீடாதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.
• 1988 தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாப் பல்கலைக்கழகத;தின் துணைவேந்தராகப் பணியாற்
றிய காலத்தில் யுத்தகாலத்திலும் துவிச்சக்கர வண்டி யிலேயே பயணம் செய்து தமிழ் மாணவர்களின் கல்விக்காக அயராது உழைத்து வந்தார்.
• 1993 இல் “தமிழ் தேசிய உணர்வுடன் தனது வாழ்வின் பெரும் பகுதியi அர்ப்பணித்து கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக ஆற்றிவரும் அரும்பணி யைப் பாராட்டி தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களினால் “மாமனிதர்” என்ற உயரிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்
• 1993 இல் உடுப்பிட்டி அமெரிக்க்ன மிசன் கல்லூரி யில் மாமனிதர் பேராசிரியர் அ.துரைராஜா அவர்களைக் கௌரவிக்கும் வகையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் வரலாறு காணாத முறையில் கௌரிவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.இதில் கலலூரி ஆசிரியர்கள்இ மாணவர்கள்,பெற்றோர்கள் மட்டுமல்லாது, ஆயிரக்கணககில் உடு;பபிட்டி மறறும் அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு அவரைக் கௌரவித்தனர்.
• 1994 இல் மீண்டும் திறந்த பல்கலைக் கழகத்தில் பணியாற்றச் சென்றார்.
• இத்தனை அளப்பரிய பணிகளையும் ஆற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் லியூக்கேமியா நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
• 1994.96.11. அன்று கொழும்பு மருத்துவ மனையில் இந்த மணணில் இருந்தும் மறைந்து அமரத்துவம் அடைந்தார்.
கல்வி அபிவிருத்தியில் மிகவும் தெளிவான சிந்தனையையும், தூரநோக்கி னையும் கொண்டிருந்த அமரர் பேராசிரியர் அழகையா துரைராஜா அவர்கள், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் 1993 இல் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய பொழுது,
யாழ்ப்பாணத்தின் வடமறவர் ஆட்சி நிலவிய வடமராட்சியின் இமையாணன் பிரதேசத்தில் பிறந்து உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாகத் திகழ்ந்த பேராசிரியர்.அ.துரைராஜா அவர்கள்,தனது ஆரம்பக் கல்வியையும்,இடைநிலைக் கல்வியையும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் பின்னர் உயர்தர வகுப்பை பருத்தித்துறை காட்லிக் கல்லூரியிலும் கற்று மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்று 1953 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தின் குடிசார் எந்திரவியல் பீடத்திற்குத் தெரிவாகினார். பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் இவரது திறமைகளை இனங்கண்ட லண்டன் கேம்;பிறிடஜ் பல்கலைக் கழகத்தின் மண்பொறியியல் துறை பேராசிரியர் எச்.றொஸ்கோ இவரை உயர் கல்வி ஆய்வு மாணவனாகத் தெரிவு செய்தார்.
மண்பொறியியல் துறையில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக இவரால் வடிவமைக்கப்பட்டு, மண்தொழில் நுட்பத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட “ஊயடஅ ஊடயல ஆழனநட” என்ற செயல்திட்டம் அவருக்கு சர்வதேச புகழை ஈட்டிக் கொடுத்ததுடன் எதிர்காலத்தில் மண் பற்றிய ஆய்வுகளுக்கும் வழிகாட்டியாகவும், ஊக்குவிப்பாகவும் இருந்தது.. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,இவரை 1962 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தின் குடிசார் எந்திரவியல் துறை விரிவுரையாளராக நியமித்தது. அவர் அங்கு கடமையாற்றிய காலத்தில் மிகச் சிறந்ததொரு ஆய்வு கூடத்தை நிர்மாணித்து சர்வதேச தரத்திற்கு அதனை உயர்த்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து, 1971 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் குடிசார் எந்திரவியல் பேராசிரியராகப் பதவியேற்று, 1975,1982 ஆகிய காலங்களில் இத்துறையின் பீடாதிபதியாகச் சேவையாற்றிப் பல ஆய்வுகளையும் மேற் கொண்டார்.அதற்குச் சான்றாக அவரால் வடிவமைக்கப்பட்ட “துரையின் கோட்பாடு” (Thurai’s Theory) இன்றும் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக் கின்றது.
1985 ஆம் அண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று பல்கலைக் கழகத்தைச் சரியான பாதையில் கொண்டு சென்றார்.அவரது காலமே யாழ் பல்கலைக் கழகத்தின் பொற்காலம் என்று சிறப்பித்துக்கூறும் அளவுக்கு மிகச் சிறந்த கல்வி நிர்வாகியாக அதனை இயக்கி வந்தார்.ஆனால் அவர் பொறுப்பேற்ற காலம் யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் துன்பியல் நிறைந்த நாட்களாகவே இருந்தன.எங்கும் யுத்தமேகம் யாழ்ப்பாண மண்ணை ஆக்கிரமித் திருந்த வேளையில் மக்களின் மனதில் ஒரு நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் வகையில் மக்களுக்காகத் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஒரு தலைவனாகவே வாழ்ந்து காட்டினார்.
வடமராட்சியில் இருந்து எங்களுடன் பல தடவைகள் துவிச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் வரை பயணித்திருக்கின்றார்.
அதேவேளை எங்களுடைய கல்லூரி மாணவர்களின் நலன்களில் மட்டுமல்லாது,யாழ் மாவட்டத்தில் எங்கெல்லாம் மாணவர்கள் பாதிக்கப்படுகின் றார்களோ அங்கு அவரது சேவைகள் விரிந்து சென்றது. 1993 ஆம் ஆணடில் ஒரே காலப்பகுதியில் இரண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன.இதில் குறிப்பிட்ட ஒரு பரீட்சைக்குத் தோற்றியிருந்த மாணவர்களுக்குப் பல்கலைக் கழகத்திற்கான அனுமதியில் பாரபட்சம் இழைக்கப்பட்டதால்,இந்த மாணவர்களில ஒரு மாணவரின் பெற்றோர் மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவைத்தார்.இதற்காக முதலாவது நிதிவைப்பாக எமது பழைய மாணவர் சங்க நிதியில் இருந்து 100000.00 ரூபாவை வழக்குச் செலவுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரியும் ஏனைய உயர்தரப் பாடசாலை களும் நிதியை வழங்கியதால்,அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றதால் அவர்கள் அனைவரும் பல்கலைக் கழக அனுமதியில் உள்வாங்கப்பட்டனர்.இதுதான் அவருக்குரிய தனித்துவம்…! இது வேறு எவருக்கும் வராது.
மாமனிதரான பேராசிரியர் துரைராஜா:
பேராசிரியர் அ.துரைராஜா அவர்கள் கல்வி அபிவிருத்தியில் எவ்வளவு தூரம் அக்கறை காட்டினாரோ அந்த அளவுக்கு மக்களை நேசிப்பதிலும், தமிழ் மக்களின் உரிமைக்கான செயற்பாடுகளிலும் தீவிரம் காட்டினார்.