பெலாரஸ் அதிபரின் மத்தியஸ்த பேச்சு வெற்றி! பின்வாங்கியது வாக்னர் படை!

You are currently viewing பெலாரஸ் அதிபரின் மத்தியஸ்த பேச்சு வெற்றி! பின்வாங்கியது வாக்னர் படை!

பெலாரஸ் அதிபரின் மத்தியஸ்த பேச்சு வெற்றியடைந்த நிலையில், வாக்னர் படையின் தலைவர் ரஷ்யாவில் கிளர்ச்சியை நிறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. வாக்னர் படையின் (Wagner Group) தலைவர் யெவ்ஜினி பிரிகோஷின் (Yevgeny Prigozhin), ரஷ்யாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இயக்கத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஒப்புதலுடன் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாஸ்கோவை இலக்காகக் கொண்ட படையெடுப்பிலிருந்து இருந்து வாக்னர் குழு பின்வாங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் டெலிகிராமில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். மாஸ்கோவை இலக்காகக் கொண்ட நடவடிக்கையில் இருந்து விலகுவதாக அந்த செய்தியின் சுருக்கம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாஸ்கோ மீதான அணிவகுப்பை நிறுத்திவிட்டு உக்ரைனில் உள்ள கள முகாம்களுக்குப் பின்வாங்குமாறு பிரிகோஷின் தனது கூலிப்படையினருக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் ஜனாதிபதி முன்மொழிந்த தீர்வு விதிமுறைகளை வாக்னர் படை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக திரும்பப் பெறப்பட்டது என்று பிரிகோஷின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் ஒரே நாளில் எதிர்பாராத பல விஷயங்கள் நடந்துள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments