Færder எனும் நகரத்தில் குடும்ப வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தியதை அடுத்து அவருடைய அலுவலகத்தில் பணியாற்றிய 5 பணியாளர்கள் மற்றும் 70 நோயாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட நபர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நோய் தொற்று கண்காணிப்பு தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் மருத்துவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைத்து நோயாளிகளும் நகராட்சியின் தொற்று கண்காணிப்பு குழுவால் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்று நகராட்சி அறிவித்துள்ளது.
நோய்த்தொற்றின் விளைவாக மருத்துவரின் அலுவலகம் 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இதேவேளை தொலைபேசி சேவை தொடர்ந்தும் இயங்கு நிலையில் இருக்குமெனவும் மருத்துவர்களின் ஆலோசனைகள் இலத்திரனியல் சாதனங்களுக்கூடாக கிடைக்கப்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில்
மருத்துவ மேற்பார்வை தேவைப்பட்டால் மற்றொரு மருத்துவர் அலுவலகத்தில் வேறு வைத்தியர் மூலம் கவனிக்கப்படும் எனவும் நகராட்சி தெரிவித்துள்ளது..