வழிபடச் சென்ற பெண்கள் குழந்தைகள் மக்களை அச்சுறுத்திக் கைது செய்யும் சிறிலங்கா இனவெறிப் படை!

You are currently viewing வழிபடச் சென்ற பெண்கள் குழந்தைகள் மக்களை அச்சுறுத்திக் கைது செய்யும் சிறிலங்கா இனவெறிப் படை!

அனைத்துலகப் பெண்கள் நாளில் தாயகத்தில் வழிபடச் சென்ற பெண்கள் குழந்தைகள் மக்களை அச்சுறுத்திக் கைது செய்யும் சிறிலங்கா இனவெறிப் படை!

வழிபடச் சென்ற பெண்கள் குழந்தைகள் மக்களை அச்சுறுத்திக் கைது செய்யும் சிறிலங்கா இனவெறிப் படை! 1

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் வழிபாட்டை அரச படைகள் புகுந்து தாக்கி குழப்பிக் கொண்டிருக்கின்றன!

இந்த தாக்குதலில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட பலர் குண்டுக்கட்டாகத் தூக்கி அவமானப்படுத்தி கைது செய்திருக்கின்றது சிறிலங்கா ஏவல் துறை!

ஒரு நாட்டுக்குள் பௌத்த சிங்கள மக்களிற்கு ஒரு நீதி இதர மக்களிற்கு பெரும் அநீதி!

வழிபடச் சென்ற பெண்கள் குழந்தைகள் மக்களை அச்சுறுத்திக் கைது செய்யும் சிறிலங்கா இனவெறிப் படை! 2

வெடுக்கு நாறியில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் கைதாகியுள்ளனர்!

 

தவபாலன் வவுனியா தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட அமைப்பாளர் கிந்துஜன் மற்றும் தமிழழகன் உள்ளிட்ட பலர் கைது .

வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோவிலடி “சிவராத்திரியில் எல்லோருக்கும் ஒளிபிறக்கட்டும்!” எனக்கூறிய ஜனாதிபதியின் படைகளும், காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் அந்தக் காடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் உட்பட மக்கள் சாப்பிட சமைத்துக் கொண்டிருந்த அன்னதான சமையல், ஏனைய படையல் பொருட்கள் அனைத்தையும் அரச படைகள் காலால் உதைத்து சீரழித்துவிட்டனர்.

எஞ்சியிருந்த தண்ணீர் கலனையும் பொலிஸார் கவிழ்த்து ஊற்றிவிட்டனர். குழந்தைகளுக்குக் கூட உணவு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்ற இனவெறித் தாண்டவம் நிகழ்கிறது!

வெளியிலிருந்து அங்கே செல்பவர்களைத் தடுத்திவைத்திருக்கின்றனர்.

மின்இயந்திரங்கள் பயன்படுத்த விடவில்லை. பெற்றோல்மக்ஸை தயார்படுத்த அதனையும் காவல்துறையினர் பறித்துச் சென்றுவிட்டனர்.

இப்போது கோயில் தீப வெளிச்சத்தில்தான் அங்குள்ளவர்கள் இருக்கின்றனர்.

“குழந்தைகள் குடிக்க குடிநீர் கூடத் தராத ஏவல் பேய்கள் இருளுக்குள் எதை வேண்டுமானாலும் செய்யும்.

அங்கு ஒரு மானுட அவலம் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களும், வேலன்சுவாமிகளும் மட்டும்தான் அங்கிருந்து குரல் தரவல்லவர்கள்.

வழிபடச் சென்ற பெண்கள் குழந்தைகள் மக்களை அச்சுறுத்திக் கைது செய்யும் சிறிலங்கா இனவெறிப் படை! 3வழிபடச் சென்ற பெண்கள் குழந்தைகள் மக்களை அச்சுறுத்திக் கைது செய்யும் சிறிலங்கா இனவெறிப் படை! 4

அங்கு கூடியிருக்கும் சிவ பக்தர்களை ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது.

அரசியல்வாதிகளே..தூதரகங்களே..மனிதவுரிமையாளர்களே..ஊடகங்களே..சிவில் சமூக அமைப்புக்களே..

அவர்களுக்காக விரைந்து குரல்கொடுங்கள்.

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இருளுக்குள், ஆயுத்தாரிகளுக்கு மத்தியில் தனித்துவிடப்பட்டிருக்கும் பக்களை ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது.”

என அங்கிருந்து அவலக் குரல்கள் எழுப்புகின்றனர் வணக்கத்திற்குச் சென்ற மக்கள்!

இந்தக் கொடிய அரச பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிப்போம்!

மக்களைக் காக்க குரல் கொடுப்போம்!

 

இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் சிறீலங்கா பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply