வடகொரிய இராணுவத்திற்கு போர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்!

You are currently viewing வடகொரிய இராணுவத்திற்கு போர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்!

வடகொரிய இராணுவத்திற்கு போர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆயிரக்கணக்கான துருப்புகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வடகொரியாவின் மேற்கில் உள்ள ஒரு பாரிய இராணுவ நடவடிக்கை தளத்தில், அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் துருப்புகளை ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் போர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு அவர் இராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

KCNA-யின் கூற்றுப்படி, ‘இராணுவம் தற்போதுள்ள சூழ்நிலையின் தேவைகளுக்கு ஏற்ப போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்தும் ஒரு புதிய உச்சக்கட்டத்தை மாறும் வகையில் கொண்டு வர வேண்டும். நம் இராணுவம் சரியான போர் தயார்நிலைக்கான அதன் யுத்த திறன்களை விரைவாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உண்மையான போர் பயிற்சிகளை சீராக தீவிரப்படுத்த வேண்டும்’ என கிம் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தனது இராணுவத்தை நவீனமயமாக்கும் வகையில் இந்த ஆண்டும் வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments