யாழ்ப்பாணம்- புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துஜா யுவதியின் சடலமே மீட்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை சிறீலங்கா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)