60 வீதமான பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிப்பு!

You are currently viewing 60 வீதமான பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிப்பு!

இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்று வடமத்திய மாகாண சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆண்கள் பலியாகி வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, திம்புலாகலை பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் சுமார் 500 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தேசிய சமாதானப் பேரவை ஊடாக செயற்படும் பொலன்னறுவை மாவட்ட சர்வமதக் குழுவில் உள்ள சிவில் சமூக ஆர்வலர்கள் குழு குழு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையைக் குறைக்கும் வகையில் காவல் துறை  நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உத்தியோகத்தர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவதுடன், தற்போதுள்ள போதைப்பொருள் சட்டதிட்டங்களை கடுமையாக்கி, குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments