கனடிய மண்ணில் யூலை 6ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு டன்டாஸ் சதுக்கத்தில் (Dundas Square) மாபெரும் கவன ஈர்ப்பு மற்றும் கண்டனப் பேரணி நடைபெற்றுள்ளது.
செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் *மாபெரும் கண்டன மற்றும் கவனஈர்ப்பு* போராட்டம் இடம்பெற்றுள்ளது.






