72 மணித்தியாலங்களில் 110 பேரை பலியெடுத்தது கொரோனா: இலங்கையில் கொவிட்-19 மரணங்கள் 2534 ஆக உயர்வு!

You are currently viewing 72 மணித்தியாலங்களில் 110 பேரை பலியெடுத்தது கொரோனா: இலங்கையில் கொவிட்-19 மரணங்கள் 2534 ஆக உயர்வு!

இலங்கையில் 72 மணித்தியாலங்களில் 110 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 2534 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் மேலும் 54 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று இரவு அறிவித்திருந்தது.

குறித்த 54 கொவிட்-19 மரணங்களும் ஜூன்-18 இல் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதிற்கு உட்பட்ட 02 பேர், 30-59 வயதுக்கிடைப்பட்ட 09 பேர், 60 வயதிற்கு மேற்பட்ட 43 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் 23 பேர் மற்றும் ஆண்கள் 31 பேர் என இவ்வாறு 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஜூன்-17 ஆம் திகதி 55 கொவிட்-19 மரணங்களும், ஜூன்-16 ஆம் திகதி 51 கொவிட்-19 மரணங்களும் நிகழ்ந்திருந்தாதாக கடந்த நாடக்ளில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த 3 நாட்களிலும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 110 ஆக உள்ளது.

இதன் மூலம் இலங்கையில் இதுவரையான நாட்களில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 2534 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments