2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குகள் அளித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தமைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி செலஸ்டீன் ஸ்ரனிஸ்லாஸினால் யாழ்ப்பாணத்தில் நேற்று (01) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேர்காணலின் போது 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குகள் அளித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குறிப்பிட்டிருந்தார்.