8 வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 70 வயதுடைய பௌத்ததுறவியான தேரர் ஒருவரைக் கைதுசெய்ய ஹெட்டிபொல காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் சுமார் 2 மாதங்களாக குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வருவதாக காவற்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சந்தேக நபர் பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் வசித்து வருவதுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.