ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் இருக்கும் மக்கள் குடியரசு பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க்கில் சுமார் 8000 உக்ரைனிய வீரர்களை ரஷ்ய ராணுவம் சிறைப்பிடித்து வைத்து இருப்பதாக ரோடியன் மிரோஷ்னிக் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது மூன்று மாதங்களை நிறைவு செய்ய இருக்கும் நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியான டான்பாஸில் தற்போது ரஷ்ய ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தநிலையில், சுமார் 8000 உக்ரைனிய வீரர்கள் ரஷ்ய ராணுவத்திடன் சிக்கி இருப்பதாகவும், அவர்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் மக்கள் குடியரசி பகுதியான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க்கில் சிறைப்பிடித்து வைத்து இருப்பதாகவும் லுஹான்ஸ்க் பகுதியில் தலைவரான ரோடியன் மிரோஷ்னிக் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS-க்கு அவர் அளித்த பேட்டியில், நிச்சியமாக உக்ரைன் ஆதரவு பிணைக் கைதிகள் நிறைய பேர் மக்கள் குடியரசு பகுதியான டொனெட்ஸ்க் பகுதியில் அடைக்கப்பட்டு உள்ளனர், அவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மக்கள் குடியரசு பகுதியில் மொத்தம் 8000 கைதிகள் வரை வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த அளவானது நாளுக்கு நாள் 100 பேர் என்ற கணக்கில் அதிகரிப்பதாகவும் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.