9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் மோசமான கால நிலையிலும் தொடர்கின்றது.

You are currently viewing 9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் மோசமான கால நிலையிலும் தொடர்கின்றது.

கடந்த 02/09/2022 நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் மனித நேய ஈருருளிப்பயணம் எழுச்சிகரமாக ஆரம்பமானது. சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தி நீதி விசாரணை ஆரம்பிக்க வேண்டும், தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழீழமே தீர்வு… எனும் கோரிக்கைகளோடு 25ம் தடவைகளாக பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தமிழீழ மக்களின் வேணவாவினை வையம் எங்கும் இடித்துரைக்கின்றது.

9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் மோசமான கால நிலையிலும் தொடர்கின்றது. 1

இன்று 9 ம் நாளாக (10/09/2022) தொடரும் இப்போராட்டாம் மூன்று நாடுகளை கடந்து யேர்மனி சார்புருக்கன் அரசியற் சந்திப்புக்களைத் தொடர்ந்து சார்குமின் மாநகர சந்திப்புக்களையும் மேற்கொண்டு மீண்டும் யேர்மனியில் பயணிக்கின்றது. ஐக்கிய நாடுகள் அவையின் 51 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தமிழினவழிப்பு சார்ந்த பொறுப்புக்கூறல்கள் தீவிரமான முறையில் பேசு பொருளாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் தமிழர்களின் தொடர் அறவழிப்போராட்டங்களின் மூலமே சர்வதேசத்தின் முழு அழுத்தங்களையும் பிரயோகித்துக்கொண்டிருக்கின்றன.

9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் மோசமான கால நிலையிலும் தொடர்கின்றது. 2

குறிப்பாக கடந்த 6ம் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது ஐ.நாவின் ஆணையாளர் அலுவலகத்தினை சந்தித்து பேசியதும் அவர்கள் ஊடாக நம்பிக்கை தரும் வாக்குறுதிகள் பெற்றதும் முக்கியமானவை. குறிப்பாக திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் கலவரம் உட்பட தான் புரிந்த குற்றங்களில் இருந்து தப்பிக்கும் நோக்கமே. இவற்றை நன்கு அவதானித்த ஐரோப்பிய பாராளுமன்ற, ஐரோப்பிய ஆலோசனை அவை அதிகாரிகள், பிரான்சு பிரதமர் இல்லம் போன்ற முக்கிய மையங்களின் கருத்துக்களும் இதுவாகவே உள்ளன. அதாவது எவ்விதமான சிக்கல் வரினும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களே முன்னுரிமை பெற்று தீர்க்கப்பட வேண்டியன எனவும் காலதாமதம் ஒரு நீர்த்துப்போகும் யுக்தி எனவும் வெளிப்படுத்தினர். பிரான்சின் முக்கிய மாநகரசபை ஒன்று பிரான்சு அரச அதிபருக்கும் வெளி நாட்டமைச்சிற்கும் தமிழர்களின் அறவழிப்போராட்டம் சார்ந்து கவனத்தில் எடுக்கத்தவறக்கூடாது எனவும் திட்டமிட்ட சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பினை பாரபட்சம் இன்றி அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்பதனையும் திடமாக வலியுறுத்தி இருந்தனர். அதற்கான இரு தரப்பு பதில்களையும் எழுத்து மூலம் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதும் மிக முக்கிய அம்சமாகும்.

9ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் மோசமான கால நிலையிலும் தொடர்கின்றது. 3

தொடரும் மழைக் கால நிலையிலும் மாவீரர்களின் ஈகங்களை நெஞ்சில் சுமந்து இலக்கு நோக்கி ஓர்மத்தோடு பயணித்துக்கொண்டிருக்கும் இப்போராட்டம் மீண்டும் நாளை (11/09/2022) பிரான்சு நாட்டின் எல்லை நோக்கி விரைந்து கீழ் காணும் கவனயீர்ப்பு போராட்டங்களில் கலந்து கொள்ள இருக்கின்றது.

12.09.2022 திங்கட் கிழமை அன்று France,Strasbourg ல் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் முன் காலை 9 மணி தொடக்கம் பி.ப 4 மணி வரை கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் அரசியற் சந்திப்புக்கள்

  • 19.09.2022 திங்கட் கிழமை Switzerland, Geneva ல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் (ஈகைப் பேரொளி முருகதாசன் திடல்)

அனைத்து தமிழ் மக்களும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள்.

“ மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

  • தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா

« மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது »

  • தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply