Ahus பல்கலைக்கழக மருத்துவமனையின் குழந்தை மருத்துவரின் கருத்து !

You are currently viewing Ahus பல்கலைக்கழக மருத்துவமனையின்  குழந்தை  மருத்துவரின்  கருத்து !

குழந்தைகள் பராமரிப்புப் பிரிவின் தலைவர் Inchley கூறுகையில், இதுவரையில் அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட மருத்துவ மனை Ahus என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றும் நேற்றைய தினம் இவர் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் பணியில் இருந்த போது அமலி என்ற ஒரு மாதக் குழந்தை கொரோனா நோய்த் தாக்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்றும் , மற்றும் இவளின் பெற்றேரும் கொரோனா வைரசின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நோர்வே சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை அன்று கூறியதாவது, 0. – 9 வயதுடைய 54 குழந்தைகளுக்கு கொரோனா வைரசின் தொற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் Inchley கூறுகையில் கொரோனா நோய் குழந்தைகளை பாதிக்கும் என்பதை நாம் அறிவோம் என்றும், ஆனால் குழந்தைகளுக்கு இது என்ன செய்யும் என்பதை சரியாக அறிய முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மற்றும் இந் நோய்யானது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள