வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலுள்ள, கொரோனா வைரஸால் இறக்கும் நோயாளிகள், வழமையான நோயாளிகளைப் போல் வலியை உணர்வதில்லை என்று Ahus இலுள்ள பிரிவு மருத்துவர் Siri Steine தெரிவித்துள்ளார். வலியுடன் இறப்பதைத் தடுக்க விரும்புவதாக Siri Steine மேலும் கூறியுள்ளார். .
வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதற்கான புதிய வழிகாட்டுதல் முறைகளை Ahus மருத்துவமனை இப்போது உருவாக்கியுள்ளது – இது வலிநிவாரண சிகிச்சை (Palliativ behandling) என்று அழைக்கப்படுகிறது.
“நோயாளிகள் பெரிய வலிகளுடன் இறக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறார் Akershus பல்கலைக்கழக மருத்துவமனையின் (Ahus) நோய்த்தடுப்பு மையத்தின் பிரிவு மருத்துவர் Siri Steine .
மேலதிக தகவல் : VG