“AstraZeneca” மீது வழக்கு தொடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

You are currently viewing “AstraZeneca” மீது வழக்கு தொடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

“கொரோனா” தடுப்பு மருந்தான “AstraZeneca” வை வழங்கும் நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் வழக்கு தொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையில் சுமார் 180 மில்லியன் மருந்துக்குடுவைகளை வழங்குவதாக ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த குறித்த மருந்து நிறுவனம், ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாக கூறும் ஐரோப்பிய ஒன்றியம் “கொரோனா” தடுப்பு மருந்து இன்றைய நிலைமையில் மிகமுக்கியமான தேவையாக இருப்பதாகவும், செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி குறித்தளவு மருந்துக்குடுவைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வழங்கும் நிலையில் மருந்து நிறுவனம் இல்லாததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதற்கு அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, “AstraZeneca” மருந்தினால் எதிர்பாராத இரத்த உறைவு ஏற்பட்டதையடுத்து மரணங்கள் நிகழ்ந்ததால், நோர்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் இம்மருந்தை பாவிப்பதை நிறுத்தி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply