BÆRUM : இரு புதிய கொரோனா இறப்புகள், நோர்வேயில் மொத்தம் 43 இறப்புகள்.

  • Post author:
You are currently viewing BÆRUM : இரு புதிய கொரோனா இறப்புகள், நோர்வேயில் மொத்தம் 43 இறப்புகள்.

பெரூமில் (Bærum) இரண்டு புதிய கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. இருவரும் வயதானவர்கள் என்றும் ஒருவர் பெரூமில் உள்ள ஒரு வயோதிபர் நிலையத்திலும், மற்றவர் Bærum மருத்துவமனையிலும் இறந்துள்ளனர். இரண்டு இறப்புகளும் கொரோனா தொற்றினால் ஏற்பட்டவை என Bærum நகராட்சி மருத்துவ அதிகாரி Frantz Leonard Nilsen கூறியுள்ளார்.

பெரூமில் இப்போது மூன்று கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகி உள்ளன. முதல் மரணம் மார்ச் 28 அன்று பதிவாகியுள்ளது.

பெரூமில் நடந்த இறப்புகளுடன், இன்று புதன்கிழமை மொத்தம் நான்கு இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நோர்வேயில் இதுவரை மொத்தம் 43 கொரோனா இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன!

பகிர்ந்துகொள்ள