EPDP ஒட்டுக்குழு உறுப்பினர் கைது!

You are currently viewing EPDP ஒட்டுக்குழு உறுப்பினர் கைது!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நேற்று வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கரத்தை துணவி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சிறீலங்கா காவற்துறை விசேட அதிரடிப் படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் வட்டுக்கோட்டை சிறீலங்கா காவற்துறை நிலையத்தில், பாரப்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply