Epstein மரணம் வலிந்து ஏற்படுத்தப்பட்டதா…? ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்…!!

You are currently viewing Epstein மரணம் வலிந்து ஏற்படுத்தப்பட்டதா…? ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்…!!
ஒஸ்லோ:
அமெரிக்காவின் பெரும் பணக்காரரும், சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மரணம் தொடர்பாகப் புதிய தடயவியல் ஆய்வு அதிர்ச்சிகரமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
2019 ஆகஸ்ட் 10ஆம் திகதி நியூயோர்க் சிறைச்சாலையில் எப்ஸ்டீன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
ஆனால், 2026 நவம்பர் 16 ஆம் திகதி லண்டனில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், தடயவியல் நிபுணர் மைக்கேல் ஃப்ரீமன் தலைமையிலான ஆய்வாளர்கள், எப்ஸ்டீனின் கழுத்து, வேறொருவரால் நெரிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.
எப்ஸ்டீனின் சகோதரர் வழங்கிய பிரேதப் பரிசோதனை ஆவணங்கள், இதுவரை வெளியிடப்படாத புகைப்படங்கள் மற்றும் முப்பரிமாண உடற்கூற்றுப் பகுப்பாய்வு ஆகியவற்றை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
அதில் சில முக்கியமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
– கழுத்தில் காணப்பட்ட காயங்களின் அமைப்பு வழக்கமான தூக்கிட்டுத் தற்கொலையுடன் முழுமையாகப் பொருந்தவில்லை.
– தோள்பட்டை, முகம் மற்றும் முதுகுப் பகுதிகளில் காணப்பட்ட காயங்கள் தாக்குதலினால் ஏற்பட்டிருக்கலாம்.
– சிறைச்சாலையின் கண்காணிப்புக் கமராக்கள் சரியாக இயங்காததும், சம்பவ இடத்திலிருந்த ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்படாததும் விசாரணையில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
இருப்பினும், நியூயோர்க் மருத்துவப் பரிசோதகர் அலுவலகம், எப்ஸ்டீனின் மரணம் அவராக வலிந்து ஏற்படுத்திக்கொண்டது என்ற தனது அதிகாரப்பூர்வ முடிவை மாற்றவில்லை. புதிய ஆய்வும் இதுவரை அறிவியல் இதழில் சக ஆய்வாளர் மதிப்பாய்வுடன் வெளியிடப்படவில்லை.
அவரது மரணம் தொடர்பான சந்தேகங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ள நிலையில், சுயாதீனமான புதிய விசாரணை நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
18.11.2026
பகிர்ந்துகொள்ள

Leave a Reply