முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், அரசாங்கம் கொரோனா வைரஸின் தீவிரத்தை புரிந்து கொண்டது.
மார்ச் 12 வியாழக்கிழமை, நோர்வே எல்லைகளை மூடுவதற்கான வரலாற்று முடிவு எடுப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான், அரசாங்கம் கொரோனா வைரஸின் தீவிரத்தை உண்மையில் புரிந்து கொண்டது என்று பிரதமர் Erna Solberg கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், பிரதமரும் அரசாங்கத்திலுள்ள ஏனையோரும் நோய்த்தொற்று மிகவும் சிறியது என்றும், மெதுவாக பரவிச் செல்லும், மேலும் வழமையை விட மிக எளிதாக இதனை கையாள முடியும் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் VGக்கு அளித்த பேட்டியில் Solberg (H) மேலும் கூறியுள்ளார்.
மேலதிக விபரம்: Dagbladet