சமூகவலைத்தளங்களூடாக இனவாதம், நிறவாதம் மற்றும் சமூக நீதிக்கு ஒவ்வாத விடயங்களை பரப்புவது குற்றங்களாக கருதப்படும் நிலையில், Facebook சமூகவலைத்தளத்தில் பதியப்பட்ட மேற்குறிப்பிட்ட வகையிலான பதிவொன்றிற்கு “லைக்” போட்டவரை சுவிற்சலாந்து நீதிமன்றம் குற்றவாளியாக கண்டுள்ளது.
சமூகநீதிக்கு புறம்பான மற்றும் தனிப்பட்ட மனிதர்களின் சிறப்புரிமையை அவமதிக்கும்விதத்திலான பதிவுகளை சமூகவலைத்தளங்களூடாக பரப்புவது குற்றம் என்ற நிலைபொதுவானதாக இருக்கும் நிலையில், இப்படியான பதிவுகளுக்கு “லைக்” போடுவதும், இப்படியான வெறுக்கத்தக்க பதிவுகளை பரப்புவதற்கு சமனானதாகும் என சுவிஸ் உயர்நீதிமன்றம் கருதுகிறது.
மேற்படி விடயமாக 2017 ஆம் ஆண்டில் தண்டம் விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர், விடயத்தை சுவிஸ் உயர்நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு சென்றபோதே, உயர்நீதிமன்றம் இத்தண்டனையை இப்போது உறுதி செய்துள்ளது.