நோர்வேயில் கொரோனா வைரஸ் காரணமாக 50 வயதிற்குட்பட்ட சிலர் உயிர் இழந்ததாக முதல் முறையாக FHI தெரிவித்துள்ளது. இறந்தவர்களில், 40 வயதில் உள்ள ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அடங்குவர் என்று FHI வெள்ளிக்கிழமை தனது தினசரி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நோர்வேயில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் வயதை FHI பட்டியலிட்டுள்ளபோது, அவர்கள் இதற்கு முன்பு 50-59 ஐ விட இளைய வயதினரைப் பதிவிடவில்லை. இந்த வார தொடக்கத்தில், நோர்வேயில் வைரஸால் கொல்லப்பட்ட இளைய நபருக்கு 51 வயது என்றும், முதியவருக்கு 104 வயது என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆனால் இப்போது 40-49 வயதுடையவர்கள் இருவர் FHI இன் தினசரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அறிக்கையின்படி:
40-49: 2 மரணங்கள்
50-59: 6 மரணங்கள்
60-69: 13 மரணங்கள்
70-79: 44 இறப்புகள்
80-89: 70 இறப்புகள்
90+: 56 இறப்புகள்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(இன்று அதிகாலை இறப்புகள் எணிக்கை 191 என FHI பதிவு செய்திருந்தது)