பொது சுகாதார நிறுவனத்தின்(FHI) கூற்றுப்படி, 0 – 10 வயது வரையிலான 16 பேரும், 11 – 20 வயதுடைய 70 பேரும் கொரோனா தோற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
கொரோனா தொற்றை நிர்வகிப்பது தொடர்பாக, பொது சுகாதார நிறுவனம் (FHI) தொற்று தொடர்புடைய தகவல்கள் குறித்த ஆராய்ச்சியின் சுருக்கத்தை விரைவாக தயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகள் ஒரு சிறிய அளவிற்கு கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன. குழந்தைகள் காவிகளாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளும் உள்ளன, ஆனால் இப்போது அவை குறைவாகவே உள்ளன என்று FHI இன் துறை இயக்குநர் Atle Fretheim Dagbladet பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
மேலதிக தகவல்: Dagbladet