அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பின்னர் இரண்டு முறை Trump GOLF விளையாடச் சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட இருக்கும் Joe Biden அவரை கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் வார இறுதியில் GOLF விளையாடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் Trump.
இது தொடர்பான 30 நொடி காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள Joe Biden, ஒரு லட்சம் உயிரிழப்பு, பல கோடி வேலையிழப்பு என அமெரிக்கா தவிக்கும் சூழலில் அதிபர் GOLF விளையாடிக் கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
மார்ச் 13 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றை தேசிய அவசர நிலையாக டிரம்ப் அறிவித்தார். தேசிய அவசரநிலை அறிவிப்புக்கு முன்பாக மார்ச் 8-ம் தேதி புளோரிடாவில் உள்ள West Palm கடற்கரையில் உள்ள தனக்கு சொந்தமான கழகத்தில் Golf விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.