கொரோனா தொற்று சந்தேகம் இருந்தால், Ibux இல் காணப்படும் Ibuprofen ஐ எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற தமது எச்சரிக்கையை மீளப்பெறுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடமிருந்து, Ibuprofen என்ற மருத்துவப் பொருளை எடுத்துக்கொள்வதால் பாதகமான விளைவுகள் எற்பட்டது குறித்த தகவல் எதுவுமில்லை என்று WHO மேலும் அறிவித்துள்ளது.
“தற்போது உள்ள தகவல்களின் அடிப்படையில், Ibuprofen பயன்படுத்துவதை தவிர்க்கும்படி உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கவில்லை” என்று அந்த அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
மேலதிக தகவல்: Dagbladet