Ibux பற்றிய WHO இன் எச்சரிக்கையை மீறுகின்றது நோர்வே!

  • Post author:
You are currently viewing Ibux பற்றிய WHO இன் எச்சரிக்கையை மீறுகின்றது நோர்வே!

கொரோனா தொற்று சந்தேகம் இருந்தால், Ibux இல் காணப்படும் Ibuprofen ஐ எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற WHO இன் பரிந்துரைக்கு அரச மற்றும் ஐரோப்பிய மருத்துவ நிறுவனங்கள் செவிசாய்க்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அரச மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின், வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என கூறப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தால் Ibux மற்றும் ibuprofen ஐ உள்ளடக்கிய பிற மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.

மேலாதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள