“NEYMAR” நிதியுதவி ; கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரேசில் கால்பந்து வீரர் நிதியுதவி!

  • Post author:
You are currently viewing “NEYMAR” நிதியுதவி ; கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரேசில் கால்பந்து வீரர் நிதியுதவி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் (Neymar) ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஐ.நா.வின் குழந்தைகள் நலநிதிக்கும் (UNICEF), பிரேசிலை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் Luciano Huck என்பவர் நடத்தும் அறக்கட்டகளைக்கும், இந்த நிதி பிரித்து வழங்கப்பட இருக்கின்றது.

Paris Saint-Germain FC (பிரான்ஸ்) அணிக்காக விளையாடி வரும் 28 வயதான நெய்மார் உலக அளவில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே Lionel Messi (அர்ஜென்டினா), Cristiano Ronaldo (போர்ச்சுகல்) உள்பட கால்பந்து நட்சத்திரங்கள் பலரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள