பெற்றோர் குழு / FAU (Rommen வளாக பெற்றோர்கள் சார்பாக)
Oslo, 20.12.2023
அனைத்து அங்கத்தவர்கள்
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் – Rommen வளாகம்.
Nedre Rommen 3 – Oslo
Rommen வளாகத்தின் பிரத்தியேக ஆண்டுக்கூட்டத்துக்கான அழைப்பு!
10.11.23 மற்றும் 02.12.23 ஆகிய நாட்களில் Rommen வளாகத்தில் நடைபெற்ற பெற்றோர் கூட்ட நெறிமுறைகளின் / Protokoll பிரகாரம், Rommen வளாக அங்கத்தவர்களின் பெரும்பான்மை ஒப்புதலை பெற்றுள்ள பெற்றோர் குழுவுடன் பிரத்தியேக ஆண்டுக்கூட்டம் தொடர்பான சுமுகமான உரையாடலொன்றுக்காக பெற்றோரால் விடுக்கப்பட்ட அழைப்பை Rommen வளாக நிர்வாகமும், அன்னை தலைமை நிர்வாகமும் கவனத்தில் கொள்ளவில்லை.
எனவே, Rommen வளாக யாப்புவிதி §13d இன் பிரகாரம், வாக்களிக்கும் தகைமையுள்ள வளாக அங்கத்தவர்களின் ⅓ பெரும்பான்மையினரின் எழுத்துமூல ஒப்புதலோடு பிரத்தியேக ஆண்டுக்கூட்டத்தை கூட்ட முடியுமென்ற அடிப்படையில், அதற்கான ஆவணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
10.11.23 மற்றும் 02.12.23 ஆகிய திகதிகளில் நடைபெற்ற பெற்றோர் கூட்டங்களில் Rommen நிர்வாகம் மற்றும் அன்னை தலைமை நிர்வாகம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தொடர்ச்சியாக இருமுறை எவ்வித எதிர்ப்புக்களுமில்லாமல் பெற்றோரால் நிறைவேற்றப்பட்டிருந்தன. இந்நிலையில், யாப்புவிதிகளின் §14 இன் பிரகாரம், நிர்வாகங்கள் மேற்படி விடயங்களை கையாளும் தகுதியை இழக்கின்றன என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..
அதனால், Rommen வளாக நிர்வாக உறுப்பினர்களும், வளாக அங்கத்தவர்களின் ⅓ பெரும்பான்மை ஒப்புதலை பெற்று பெற்றோரால் அங்கீகரிக்கப்பட்ட பெற்றோர் குழுவும் இணைந்து Rommen வளாகத்தின் பிரத்தியேக ஆண்டுக்கூட்டத்திற்கான அழைப்பை விடுக்கின்றனர்.
பிரத்தியேக ஆண்டுக்கூட்டம் Rommen வளாகம்
காலம்: வெள்ளி 05.01.2024
நேரம்: 18:00 – 20:00
இடம்: Nedre Rommen 3 (Rommen வளாக இரண்டாம் மாடி)
விடயங்கள்
- வாக்களிக்கும் தகைமையுடைய அங்கத்தவர்களை உறுதி செய்தல்; அங்கீகரித்தல்.
- கூட்ட அழைப்பை அங்கீகரித்தல்.
- கூட்ட தலைவர், வழிநடத்துனர், அறிக்கை எழுதுனர் தெரிவு.
- 10.11.12 மற்றும் 02.12.23 கூட்ட நெறிமுறைகள் / Protokoll மற்றும் கூட்ட அறிக்கைகள் சரிபார்த்து ஆமோதித்தல்.
- அன்னை தலைமை நிர்வாகம் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் Rommen வளாக நிர்வாக மாற்றம் ஆகியவற்றுக்கு Rommen வளாக அங்கத்தவர்களின் ⅓ பெரும்பான்மையினர் எழுத்துமூல ஒப்புதலை வழங்கியுள்ளனர்.
- புதிய தேர்தல் குழு உறுப்பினர்கள் அறிமுகம் (3 பேர்).
- புதிய Rommen வளாக நிர்வாக உறுப்பினர்களாக போட்டியிட விரும்புபவர்கள் அறிமுகம்.
○ நிர்வாக உறுப்பினர் முன்மொழிவுக்கான இறுதி நாள் 31.12.23.
- புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான தெரிவு (13 பேர்).
- புதிய Rommen நிர்வாகத்தை அங்கீகரித்தல்.
குறிப்பு
- புதிய நிர்வாக அங்கத்தவர்களாக வர விரும்புபவர்கள், தமது பெயர் விபரங்களை, 31.12.23 இற்கு முன்னதாக கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்: aptk.fau@gmail.com
- பொதுவான அவதானிப்பாளர்களின் / Observatører வருகை எதிர்பார்க்கப்படும்.
- இவ்வறிவித்தல், Norsk / தமிழ் ஊடகங்கள், மின்னஞ்சல், குறுந்தகவல், சமூகவலைத்தளங்கள் என பல தளங்களின் ஊடாக அறிவிக்கப்படுகிறது.
Innkalling til ekstraordinært årsmøte i APTK Rommen
Ledelsen i APTK sentral og APTK Rommen har ikke imøtekommet våre krav eller tatt initiativ til dialog med foreldregruppen som er representanter for mer enn 1/3 av medlemmene. Ettersom det foreligger mistillit mot APTK Rommen styre og sentralstyre er de inhabil ihht. punkt §14 i vedtektene. APTK Rommen styremedlemmer sammen med Foreldregruppen som representerer medlemmene kaller inn til ett ekstraordinært årsmøte i APTK Rommen.
Dato: Fredag 05.01.2024
Tid: 18.00 – 20.00
Sted: Nedre Rommen 3 (APTK Rommen)
De som ønsker å stille som kandidater til styre eller har andre spørsmål bes sende mail til aptk.fau@gmail.com innen 31.12.23.
Se link for mer info og saksliste.
https://drive.google.com/file/