SNAPCHAT ; டிரம்பின் கணக்கை இனி விளம்பரப்படுத்த மாட்டொம்!

  • Post author:
You are currently viewing SNAPCHAT ; டிரம்பின் கணக்கை இனி விளம்பரப்படுத்த மாட்டொம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் செய்திகளை, துல்லியமற்ற அல்லது வன்முறையைத் தூண்டும் செய்தி என முத்திரை குத்திய ட்விட்டரின் (Twitter) முடிவைப் பின்பற்றி ஸ்னாப்சாட் (Snapchat), டிரம்பின் Snapchat கணக்கை இனி விளம்பரப்படுத்த மாட்டொம் என்று New York Times பத்திரிகையிடம் கூறியுள்ளது.

நடைமுறையில் இது, Snapchat செய்தி மற்றும் வரலாறு பக்கத்தில் செய்திகளை வெளியிடுதலிருந்து டிரம்பின் கணக்கை நீக்குகின்றது என்பதாகும். அவரது கணக்கு இன்னும் அப்படியே உள்ளது.

வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு வேலிக்கு உள்ளே வந்தால் “இரத்தவெறி கொண்ட நாய்கள்” மற்றும் “அச்சுறுத்தும் ஆயுதங்கள்” போன்றவற்றை அனுப்புவுள்ளதாக டிரம்ப் சனிக்கிழமை எழுதிய Twitter செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Snapchat கூறியுள்ளது.

“Discovery பக்கத்தில் இலவச விளம்பர உயர்வு அளிப்பதன் மூலம், இன வன்முறை மற்றும் அநீதியைத் தூண்டும் குரல்களை நாங்கள் ஊக்குவிக்கப் போவதில்லை” என்று Snapchat செய்தித் தொடர்பாளர் Rachel Racusen கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள