STAVANGER : 29 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று!

  • Post author:
You are currently viewing STAVANGER : 29 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று!

கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக Stavanger பல்கலைக்கழக மருத்துவமனையில் (SUS) அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில் 29 வயது வாலிபர் ஒருவர் இருப்பதாக Stavangerல் உள்ள தொற்று பாதுகாப்பு ஆலோசகர் Jon Sundal தெரிவித்துள்ளார்.

SUS மருத்துவமனையில் உள்ள நோயாளிகளில் இருவர் தீவிர சிகிச்சைக்கு உட்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் ஒருவருக்கு சுவாசக் கருவி தேவைப்படுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

சுவாசக் கருவியில் வைக்கப்படும் நபர் 40-50 வயதுக்குட்பட்டவர் என்றும், தனியுரிமை காரணங்களுக்காக, அந்த நபருக்கு அடிப்படை நோய்கள் உள்ளதா அல்லது ஆபத்து நிலையில் உள்ளவரா என்பதை மருத்துவமனை வெளியிடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒன்பது நோயாளிகளைத் தவிர, மருத்துவமனையில் ஒன்பது ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 8,000 ஊழியர்களில் கிட்டத்தட்ட 651 ஊழியர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இதுவரை, SUS மருத்துவமனையில் எவரும் வைரஸின் விளைவாக இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள