புதிய, நிதி நெருக்கடி நிவாரண திட்டத்தை முன்வைத்தது நோர்வே பாராளுமன்றம்!

  • Post author:
You are currently viewing புதிய, நிதி நெருக்கடி நிவாரண திட்டத்தை முன்வைத்தது  நோர்வே பாராளுமன்றம்!

பாராளுமன்ற நிதிக் குழுவினர் இரவு முழுவதும் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு புதிய நிதி நெருக்கடி நிவாரண திட்டத்துக்கு உடன்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவுகள் சில:

  • Arbeidsgjevaravgift (AGA) இரண்டு மாதங்களுக்கு 4 சதவீத புள்ளிகளால் குறைக்கப்படுகின்றது.
  • தொற்றுநோயின் விளைவாக NAV, Kommunar மற்றும் Helsevesenet எதிர்கொள்ளும் கூடுதல் செலவுகளுக்கான நிதி ஈடுசெய்யப்படும்.
  • கொரோனா தொற்று நோயின் விளைவாக வருமான இழப்பை சந்திக்கும் மாணவர்களுக்கு மாணவர் கடன் நிதியின் (Lånekassen) மூலம் தற்காலிக உதவி ஏற்பாட்டை அரசாங்கம் விரைவில் வழங்கும்.
  • ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தேசிய நெடுஞ்சாலை, படகுகள் கட்டணங்களை குறைப்பதற்கான திட்டங்களுடன் அரசாங்கம் விரைவில் வரும்.
  • வயது வந்தோர் கல்வி, பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றிலிருந்து Online மூலம் கல்வி கற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
  • வருமான இழப்புக்கான இழப்பீட்டுத் திட்டம், கலாச்சாரத் துறைக்கு 300 மில்லியனும், விளையாட்டு மற்றும் தன்னார்வ துறைக்கு 600 மில்லியனுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இந்த புதிய திட்டங்களை செயல்படுத்துவது என்பது குறித்து அரசாங்கம் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பை ஒன்றை நடத்தவுள்ளது.

மேலதிக விபரம்: NRK.no

பகிர்ந்துகொள்ள