The family man என்கிற திரைப்படத்தை தமிழர்களாக தடைசெய்வோம்!!

You are currently viewing The family man என்கிற திரைப்படத்தை தமிழர்களாக தடைசெய்வோம்!!

The family man என்கிற புலனாய்வு திரைத்தொடரின் முதற்பகுதி பலமில்லியன் மக்களால் பார்க்கப்பட்டது,
இத்தொடரின் பகுதி 2 விரைவில் வெளிவர இருக்கிறது, இதில் காட்டப்படும் காட்சிகளில் பாக்கிஸ்தான் உளவுத்துறையோடு சேர்ந்து தமிழ் பேசும் போராளிகள் இந்தியாமீது தாக்குதல் நடாத்துவதாக அதுவும் தற்கொலை தாக்குதல் நடாத்துவதாக காட்டப்படுகிறது,

சமந்தா என்கின்ற பிரபலமான நடிகை தமிழ் பேசும் போராளிப் பெண்ணாக வருவதால் இந்தியாவில் இருக்கும் தமிழ் பேசும் போராளிகள் குறிப்பாகப் பெண்கள் மீது கண்காணிப்பும், கெடுபிடியும் நடைபெற்றால் அது சரி தான் என்கிற பொதுமக்கள் மனநிலையை உருவாக்கும் முகமாகத்தான் இத்தகைய திட்டமிட்ட பயங்கரவாதிப் பட்டங்கள் எம்மீது சுமத்தப் படுகிறது.

இந்தியா செய்யும் என்று இன்னும் கூட பேசுகின்றவர்களே பல மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்படும் இந்த தொடர் வந்தததன் பின்னால் தமிழ் பேசும் போராளிகள் எல்லாம் சாதாரண இந்திய மக்களின் பொதுப்புத்தியில் எப்படிப் பார்க்கப்படுவார்கள் என்பதை அறிவீர்களா..?

நடந்த எல்லாவற்றையும் எப்படியோ மறந்து அல்லது தாங்கிக் கொண்டு எவ்வளவு தான் நீங்கள் வாலாட்டி விசுவாசம் காட்டினாலும் இறுதியில் இந்தியா உங்களுக்கு தரும் பரிசு இதோ இது போல நடுத்தெரு தான்..

இந்த தொடரின் கதையாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய இராணுவப் புலனாய்வு(MI) மற்றும் தேசியப் புலனாய்வுப் பிரிவுகளின் உதவியும், வழிகாட்டுதலும் இல்லாமல் எடுக்க முடியாத இந்த தொடரில் பாக்கிஸ்தான் உளவு அமைப்புடன் அல்லது இந்தியாவை தாக்கும் அமைப்புகளுடன் தமிழ் பேசும் ஆயுதக் கையாளுகை தெரிந்த போராளிகளும் இணைந்து தாக்குகிறார்கள் என்று காட்டுவது எத்தகைய வன்மத்தின் எதிர்கால இந்தியப் போக்கின்
வெளிப்பாடு என்பதையும் இந் நேரத்தில் ஏன் இதுவெல்லாம் வலிந்து சொல்லப்படுகிறது என்பதையும் அப்பாவித் தமிழர்களான நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

பகிர்ந்துகொள்ள

Leave a Reply