செய்தியாளர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளையே கேட்பதால் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதில் பயன் ஒன்றும் இல்லையென அமெரிக்க அதிபர் டிரம்ப் (Trump) தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கொரோனாவுக்கு கிருமிநாசினியை உடலில் செலுத்தி ஏன் சிகிச்சையளிக்கக் கூடாது என்று செய்தியாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியது பல தரப்பினராலும் கிண்டல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், செய்தியாளர்கள் உண்மையை வெளியிட மறுப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் ஊடகங்களுக்கு மதிப்பீடு அதிகரிக்கலாம் என்றும், மக்களுக்கு பொய்யான செய்திகள் மட்டுமே கிடைப்பதாகவும் டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.